
திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், ஒருதலைக்காதலால் இளம் பெண்ணை வெட்டிக்கொன்ற பெரியப்பா மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவருக்கு ஹேமலதா என்ற மகள் உள்ளார். சிவசுப்பிரமணியனுக்கும் அவரது மூத்த சகோதரருக்கும் நீண்ட காலமாகவே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் இரு குடும்பத்தாரிடையேயும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிவசுப்பிரமணியனின் மகள் ஹேமாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடத்த திட்டமிடப்பட்டது. வரன் அமைந்த நிலையில், ஹேமாவிற்கு நேற்று நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு சிவசுப்பிரமணியன் வீட்டுக்கு, அவரது அண்ணன் மகன் சத்தியகுமார் சென்றுள்ளார். அப்போது, ‘உனது மகளுக்கு எப்படி நிச்சயம் செய்கிறாய் என நான் பார்த்து விடுகிறேன்’ என்று சத்தியகுமார் தகராறு செய்தார். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென சத்தியகுமார் அரிவாளால் சிவசுப்பிரமணியனை வெட்டினார். அப்போது அங்கிருந்த ஹேமா, இதனை தடுக்க வந்தார். சக்திகுமார், அவரையும் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் ஹேமா, ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து, அருகில் இருந்தோர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஹேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சிவசுப்பிரமணியம், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததனர்.
விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:
சத்தியகுமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ஹேமலதாவை பணி செய்யும் இடமான தில்லைநகருக்கு பைக்கில் அழைத்து செல்வார். ஒரு நாள், ஹேமலதாவிடம் காதலிப்பதாக கூறி உள்ளார். அதற்கு ஹேமலதா, நீ எனக்கு அண்ணன், இப்படியெல்லாம் என்னிடம் பேசாதே என கண்டித்து உள்ளார். ஆனால் சத்தியகுமார் அதை பொருட்படுத்தவில்லை. இதனால், அவரை லவ் டார்ச்சர் செய்துள்ளார். இதுகுறித்து ஹேமலதா பெற்றோரிடம் சத்தியகுமார் தனக்கு லவ் டார்ச்சர் கொடுப்பதாக் கூறி உள்ளார். இதனால், இரு குடும்பத்தாருக்கும் விரோதம் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து, ஹேமலதாவுக்கு உடனடியாக திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து திருச்சியை சேர்ந்த ஒருவரை பேசி முடிவு செய்தனர். நேற்று நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. இதை அறிந்த சத்தியகுமார் பெண் வீட்டுக்கு வந்து அவரை வெட்டிக்கொன்று உள்ளார்.
இதனையடுத்து, தலைமறைவான சத்தியகுமார் போலீசார் தேடுவதை தெரிந்து, திருச்சி ஜேஎம் 3 நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.