"ஜெயலலிதாவின் கையால் தான் பரிசு வாங்குவேன்" - நிராசையாகி போன தங்கமகன் மாரியப்பனின் கனவு

 
Published : Dec 23, 2016, 02:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
"ஜெயலலிதாவின் கையால் தான் பரிசு வாங்குவேன்" - நிராசையாகி போன தங்கமகன் மாரியப்பனின் கனவு

சுருக்கம்

ரியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் புதிய உலக சாதனையோடு தங்கத்தை வென்றார் சேலத்தை அடுத்த பெரியவடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன்.

மாரியப்பனின் இந்த அசாதாரண உலாக சாதனை தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது.

மாரியப்பன தங்கத்தை வெல்லும்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.ஏனெனில் அந்த அளவிற்கு அவர் மீது பற்றும் பாசமும் வைத்திருந்தார் மாரியப்பன்.

மாநில,தேசிய,உலக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு அள்ளி கொடுப்பவர் ஜெ.

அந்த வகையில் மாரியப்பன் தங்க பதக்கம் வென்ற அன்றே அவருக்கு பாராட்டு கடிதமும் ரூ.2 கோடி பரிசு தொகையும் கேட்டுகொண்டால் தமிழக அரசின் வேலையும் வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்று வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

மாரியப்பன் வெற்றி பெற்று ரியோ போட்டிகள் முடிந்து வருவதற்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. அந்த நிலையயில்தான் துரதிர்ஷ்டவசமாக செல்வி ஜெயலலிதா படுத்த படுக்கையாகி விட்டார்.தகர்ந்து போனது மாரியப்பனின் கனவு.

எப்படியாது ஜெயலலிதாவை நேரில் பார்த்து விட வேண்டும், அவரது கையால் பரிசு வாங்கி விட வேண்டும் என்று தொடர்ந்து நம்பிக்கை இழக்காமல் இருந்த மாரியப்பன் எப்படியும் ஜெ. நன்றாக குணமடைந்து வந்து விடுவார், அவரது கையால் பரிசு பெற்றுகொள்ளலாம் என காத்திருந்தார்.

கடந்த டிச. 5ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததால் மாரியப்பனின் ஆசை நிராசையாகவே ஆகிப்போனது.

PREV
click me!

Recommended Stories

நாளுக்கு நாள் முற்றும் செவிலியர்களின் போராட்டம்.. அதிகாரத் திமிரில் ஆட்டம் போடும் திமுக.. அன்புமணி ஆவேசம்
ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!