உலக இருதய தினம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி.. ஆர்வமுடன் கலந்துக் கொண்ட மாணவர்கள்..

By Thanalakshmi VFirst Published Sep 18, 2022, 2:39 PM IST
Highlights

உலக இருதய தினம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக் கணக்கான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
 

நாடு முழுவதும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு நெல்லையில் இந்திய மருத்துவர்கள் சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. உலக இருதய தினம் மற்றும் போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. 

மாரத்தான் போட்டியை  திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன்  கொடியசைத்து தொடங்கி வைத்து ஓட்டப்பந்தய வீரர்களுடன்  5 கிலோ மீட்டர் ஓடினாா். முன்னதாக போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர். 

மேலும் படிக்க:தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை.. இன்றைய வானிலை அப்டேட்

இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கி மாவட்ட மைய நூலகம், தூய சவேரியார் கல்லூரி சாலை,  அரசு மருத்துவமனை, ரவுண்டானா வழியாக ஆயுதப்படை சாலையில் மீண்டும்  அண்ணா விளையாட்டு அரங்கில் ஓட்டத்தை நிறைவு செய்தனர். 

போட்டியில்  இதில் 1000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு போட்டியின் முடிவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன வழங்கப்பட்டன.

 மேலும் படிக்க:திருச்சியில் நின்ற இடத்திலேயே உயிர் இழந்த வளர்ப்பு யானை ஜமீலா..! காரணம் என்ன..?

click me!