சுக்மா பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் - தமிழக வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

 
Published : Apr 24, 2017, 09:42 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
சுக்மா பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் - தமிழக வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

சுருக்கம்

Maoists attack in Sukma area - Tamil Nadu soldiers dead

சத்தீஸ்கர் - சுக்மாவில் மாவோயிடுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 25 வீரர்களில் 3 பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா என்ற பகுதியில் முகாமிட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 74வது படைப்பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

சுக்மாவில் மாவோயிடுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 25 வீரர்களில் 3 பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.

தமிழக வீரர்கள் செந்தில் குமார், அழகுபாண்டி, திருமுருகன் ஆகியோர் உயிரிழந்தனர்.

300 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதாக காயமடைந்த வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!