பக்ரீத் பண்டிகையையொட்டி அடுத்த நாள் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறையா..? தமிழக அரசின் முடிவு என்ன.?

Published : Jun 28, 2023, 07:50 AM ISTUpdated : Jun 28, 2023, 09:14 AM IST
பக்ரீத் பண்டிகையையொட்டி அடுத்த நாள் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறையா..? தமிழக அரசின் முடிவு என்ன.?

சுருக்கம்

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை நாளை தினம் அதாவது வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் அதற்கு அடுத்த நாளாக உள்ள வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அளிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நாளை பக்ரீத் பண்டிகை

பக்ரீத் பண்டிகை கொண்டாட ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்று இருப்பதால் வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை முடிந்து அடுத்த நாள் வெள்ளிக்கிழமை திரும்ப வர வேண்டிய சூழ்நிலை இருப்பதால் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக மனித மக்கள் கட்சி லைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை ஜூன் 29 அன்று கொண்டாடப்படவிருக்கும் நிலையில் ஜூன் 30 வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் எனச் சிறுபான்மை முஸ்லிம்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை.?

ஜூலை 1 மற்றும் ஜூலை 2 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் பள்ளிக் செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் முஸ்லிம் அரசுப் பணியாளர்கள் ஆகியோர் தனது சொந்த ஊர்களுக்கு பண்டிகை கொண்டாடித் திரும்புவதில் சிரமம் இருக்காது. மேலும் ஒருசில கல்வி நிறுவனங்களில் ஜூன் 30 அன்று தேர்வுகளும் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. சொந்த ஊருக்குச் செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் பக்ரீத் பண்டிகைக்கு அடுத்த நாளான ஜூன் 30-ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் முடிவு என்ன.?

ஏற்கனவே தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட  பண்டிகைகள் வியாழக்கிழமை வந்த நிலையில் வெள்ளிக்கிழமையும் கூடுதலாக அரசு விடுமுறையானது விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி வருகின்ற வெள்ளிக்கிழமைக்கும் விடுமுறை விடப்பட்டால் தொடர்ந்து சனி ஞாயிறு அரசு விடுமுறை  கிடைக்கும் என்பதால் இஸ்லாமியர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று திரும்பும் வகையில் விடுமுறை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுவது தொடர்பாக இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

தக்காளி விலை தாறுமாறாக ஏறியதற்கு இதுதான் காரணம்! பதுக்கினால் கடும் நடவடிக்கை!அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!
Tamilnadu Power Cut: நாளை தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!