உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் மாற்றம்; அமுதா ஐ.ஏ.எஸ். அதிரடி உத்தரவு... பின்னணி என்ன?

By SG Balan  |  First Published Jun 27, 2023, 11:38 PM IST

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர், உளவுத் துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் காவல்துறையில் முக்கிய பொறுப்பிகளில் இருந்தவர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சட்டம் - ஒழுங்கு மற்றும் உளவுத்துறைக்கு கூடுதல் டிஜிபிகளாக இருந்தவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர் ஆவடி காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகர காவல் ஆணையர் பணியில் இருந்த அருண் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

Tap to resize

Latest Videos

பக்ரீத் தொடர் விடுமுறை! 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

உளவுத்துறையிலும் அதிரடியான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டேவிட்சன் தேவாசிர்வாதம் வசம் இருந்த உளவுத்துறை கூடுதல் டிஜிபி பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, உளவுத்துறை ஐஜி செந்தில் வேலனுக்கு உளவுத்துறை கூடுதல் டிஜிபி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

டேவிட்சன் தேவசகாகம் இப்போது தலைமையிட ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால், சென்னை மாநகர காவல் ஆணையம் பதவிக்கான வாய்ப்பும் அவரிடம் இருந்து கைநழுவி இருக்கிறது. அதுமட்டுமின்றி, டேவிட்சன் உளவுத்துறை பதவியை இழந்துவிட்டதால் இப்போது உளவுத்துறையின் முழு பொறுப்பும் செந்தில்வேலன் வசம் வந்துள்ளது.

ஈழத் தமிழர் பிரச்சினையை கையில் எடுக்கும் அண்ணாமலை! பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேச்சு!

காவல்துறை டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு இந்த மாதம் ஓய்வு பெறுகிறார். அவருக்குப் பின் அந்தப் பதவிக்கு வர வாய்ப்புள்ளவர்களில் முக்கியமானவராக இருப்பவர் சென்னை மாநகர காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால். அவருக்கு காவல்துறை டிஜிபி பதவி வழங்கப்பட்டால், தனக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் பதவி கிடைக்கும் என்று டேவிட்சன் கணக்கு போட்டதாகச் சொல்லப்படுகிறது.

திடீர் பயணமா? இந்த வழியில் புக் செய்தால் ரயில் டிக்கெட் கிடைப்பது உறுதி! முழு விவரம் இதோ...

click me!