இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை.! முதல்வர் ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சி கோரிக்கை !

By Raghupati RFirst Published Apr 30, 2022, 1:08 PM IST
Highlights

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய சேர்ந்து கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இதனால், பொதுமக்கள் அனைவரும் சுற்றுலாத் தலங்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்று திரும்பினர். தமிழகத்தில் நாளை மே 1 தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் இன்றும் நாளையும் விடுமுறை தினங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 1ம் தேதி  உழைப்பாளர் தினத்தையும், மே 3ம் தேதி ரம்ஜான் பண்டிகையையும் கொண்டாட மக்கள்  தயாராகியுள்ளனர்.

இடையில் மே 2 ஆம் தேதி திங்கட்கிழமை ஒருநாளுக்காக சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் திரும்பி வர வேண்டிய சூழல் ஏற்படும். இதனால்   மே 2ம் தேதியை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை என்னும் ஈகைத் திருநாள் வரும் மே 3-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. 

வரும் ஏப்ரல் 30, மே1 மற்றும் மே 3 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன. இடையில் மே 2 திங்கள்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்து விட்டு, அதற்கு ஈடாக வேறு ஒரு நாளை வேலை நாளாக அறிவித்தால் ஈகைத் திருநாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசதியாக அமையும். எனவே முதல்வர் இதுகுறித்து உரிய ஆணை பிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!

click me!