மணிகண்டன் உயிரிழந்த விவகாரம்.. போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது என்ன? சிசிடிவி காட்சி வெளியீடு..

Published : Dec 06, 2021, 07:16 PM IST
மணிகண்டன் உயிரிழந்த விவகாரம்.. போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது என்ன? சிசிடிவி காட்சி வெளியீடு..

சுருக்கம்

இராமநாதபுரத்தில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.  

இராமநாதபுரம் மாவட்டம் முதுக்குளத்தூர் அருகே விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், அன்றைய தினம் அந்த இளைஞர் காவல்நிலையத்திற்கு வந்து சென்ற சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கீழத்தூவலை சேர்ந்த மணிகண்டன் என்ற அந்த இளைஞர், விசாரணை என்னும் பெயரில் போலீசார் நடத்திய கொடூர தாக்குதல் தான் உடல் நல குறைவு ஏற்பட்டு அவர் இறந்ததாக அவரது உறவினர் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இதுக்குறித்து மறுப்பு தெரிவிக்கும் போலீசார்  சம்பவதினத்தன்று காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

அதில் மணிகண்டன் காவல் நிலையத்திற்கு வருவதும், அங்கு போலீசார் விசாரிப்பதும் பின்னர் அவர் திரும்பி செல்லுவதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன. 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணக்குமார். இவரது மகன் மணிகண்டன். இவருக்கு வயது 21. கல்லூரி மாணவரான இவர், டிசம்பர் 4 ஆம் தேதி மாலை பரமக்குடி - கீழத்தூவல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்ட கீழத்தூவல் போலீஸார் மணிகண்டனின் வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக, மணிகண்டனை போலீசார் விரட்டிச் பிடித்து, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். 

பின்னர் அன்று இரவு மணிகண்டனின் தாயாரை வரவழைத்து மணிகண்டனை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், திடீரென்று நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மூன்று முறை ரத்த வாந்தி  எடுத்ததாக சொல்லபடுகிறது. மேலும் அவரது ஆண் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டு இருந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். அதனையடுத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டனின் உறவினர்கள், கிராமத்தினர் போலீசார் கொடூரமாக தாக்கியதில்தான் மணிகண்டன் உயிரிழந்தார் எனக் கூறி, முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதுகுளத்தூர் டிஎஸ்பி ஜான்பிரிட்டோ, குற்றப் பிரிவு டிஎஸ்பி திருமலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்பு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். 

ஆனால், எனது மகன் மரணத்திற்கு காரணமாக போலீசாரை கைது செய்யவேண்டும் எனவும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும், மணிகண்டன் உடலை வாங்க குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். மணிகண்டன் பிறந்த நாளில் அவர் உயிரிழந்தது, உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் மணிகண்டன் மரணத்திற்கு நீதி  கேட்டு  #JusticeForManikandan என்கிற ஹேஸ்டேக்  ட்ரெண்டானது. 

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!