நான் முதல்வன் திட்டத்தில் பொறியியல் மாணவர்களை தொடர்ந்து அடுத்தகட்டமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்படுவார்கள் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர் இன்னோசன்ட் திவ்யா விளக்கம் அளித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தில் பொறியியல் மாணவர்களை தொடர்ந்து அடுத்தகட்டமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்படுவார்கள் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர் இன்னோசன்ட் திவ்யா விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் கல்லூரியில் நான் முதல்வன் என்ற திட்டத்தின் கருத்தரங்கு மற்றும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் இன்னோசன்ட் திவ்யா கலந்துக்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிங்க: உதயநிதியை வரவேற்ற அதிமுக கொடிகள்..? கோட்டை விட்ட முத்துராமலிங்கம்..! கெத்து காட்டிய முனுசாமி...!
அப்போது பேசிய அவர், நான் முதல்வன் திட்டம் முதல்வரின் கனவு திட்டம், இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 468 பொறியியல் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களை சந்தித்து கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் 5 இடமாக நடக்கிறது. இதனை அடுத்து சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல்வர் அவர்கள் நான் முதல்வர் இணைய தளத்தை தொடங்கி வைத்தார். இதில் அனைத்து பொறியில் கல்லூரி மாணவர்களையும் கொண்டு வந்துள்ளோம். இணைய தளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இலவச பாடதிட்டங்களும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டாய பாடதிட்டங்களும் உள்ளது.
இதையும் படிங்க: NIEPMD தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ரூ.44,000 சம்பளத்தில் அரசு பணி.. விவரம் இங்கே
இதில் மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம், இதுகுறித்து தெரிந்து கொள்ளும் வகையில் வரும் 19 ஆம் தேதி முதல் கல்லூரி பேராசிரியர்கள் 7,700 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். மேலும் இணைய தளத்தில் 150 தொழில் நிறுவனங்கள் உள்ளது, ஆன்லைன் வகுப்புகளும், வளாக வகுப்புகளும் நடத்தப்படுகிறது. 1 லட்சத்து 79 ஆயிரம் பேருக்கு இணைய தளத்தில் இணைய அழைப்பு விடுக்கப்படுள்ள நிலையில் 30 சதவீதம் பேருக்கு மேல் இணைந்து பயன்பெற தொடங்கிவிட்டனர். பொறியியல் மாணவர்களை தொடர்ந்து அடுத்தகட்டமாக நான் முதல்வன் திட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இணைக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.