டாஸ்மாக் கடையின் அருகே திருட்டுத்தனமாக சாராயம் விற்றவர் கைது... 300 பாட்டில்கள் பறிமுதல்...

Asianet News Tamil  
Published : Jun 18, 2018, 09:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
டாஸ்மாக் கடையின் அருகே திருட்டுத்தனமாக சாராயம் விற்றவர் கைது... 300 பாட்டில்கள் பறிமுதல்...

சுருக்கம்

man arrested who sell liquor bottles illegally near Tasmac shop 300 bottles confiscated ...

திருநெல்வேலி

திருநெல்வேலியில் டாஸ்மாக் கடையின் அருகே திருட்டுத்தனமாக சாராய பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை காவலாளர்கள் கைது செய்தனர். 

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் குறிச்சி அருகே பாளையங்கால்வாய் பகுதியில் திருட்டுத்தனமாக சாராயம்  விற்பனை நடைபெற்று வருகிறது என்று பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையில் காவலாளர்கள் நேற்று இரவு திடிரென ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, டாஸ்மாக் சாராயக் கடை அருகே திருட்டுத்தனமாக ஒருவர் சாராய பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டார். அவரை கையும் களவுமாக பிடித்த காவலாளர்கள்ள் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர், மேலக்கருங்குளத்தைச் சேர்ந்த ராகவன் (37) என்பது தெரியவந்தது. 

திருட்டுத்தனமாக சாராய பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அவரை காவலாளர்கள் கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்து 300 சாராய பாட்டில்களை  பறிமுதலும் செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.. வைரலாகும் செல்லூர் ராஜு பேட்டி.. கடுப்பான அதிமுக தொண்டர்கள்!
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி