வேலூரில் விவசாயியை அடித்தே கொன்றவர் கைது; தலைமறைவான மற்றொருவருக்கு வலைவீச்சு...

 
Published : Apr 18, 2018, 09:18 AM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
வேலூரில் விவசாயியை அடித்தே கொன்றவர் கைது; தலைமறைவான மற்றொருவருக்கு வலைவீச்சு...

சுருக்கம்

man arrested for who killed farmer in Vellore

வேலூர் 

வேலூரில், நிலத்தகராறில் விவசாயியை அடித்தேக் கொன்றது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொருவரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், திமிரியை அடுத்த சீயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன் (35), விவசாயியான இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தயாளனுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன்கள் சரவணன் (45), எழிலரசன் (40) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன், எழிலரசன் மற்றும் அவர்களின் உறவினர் முனியப்பன் ஆகியோருக்கும் தயாளனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

இதில், ஒருவரை ஒருவர் கற்களாலும், கட்டைகளாலும் வலுவாக தாக்கிக் கொண்டனர். மேலும் சரவணன், எழிலரசன், முனியப்பன் ஆகியோர் பலமாக அடித்து தயாளனை  கொன்றுவிட்டனர். சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்த தயாளன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், படுகாயமடைந்த சரவணன் வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி காவல் ஆய்வாளர் வெங்கடேசன், உதவி ஆய்வாளர்  பிச்சாண்டி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தயாளனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிந்து எழிலரசனை கைது செய்தனர். மேலும், தலைமறைவான உறவினர் முனியப்பனை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!