
திண்டுக்கல்
திண்டிக்கல்லில், சுற்றுப் பகுதியில் விற்பதற்காக வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் காவலாளர்களால் கைது செய்யப்பட்டு 14 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ளது ஐயம்பாளையம் குட்டிக்கரடு பகுதி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (35). இவர் ஒரு கூலித் தொழிலாளி.
இவரது வீட்டில், கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக பட்டிவீரன்பட்டி காவலாளர்களுக்கு அக்கம்பக்கத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் பாண்டியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாண்டியின் வீட்டில் 14 கிலோ கஞ்சா பதுக்கி வைக்ப்பட்டு இருந்ததை காவலாளர்கள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து பாண்டியை காவலாளர்கள் கைது செய்ததோடு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 14 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பட்டிவீரன்பட்டி மற்றும் ஐயம்பாளையம் பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.