144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மகா புஷ்கர விழா இன்று தொடக்கம்  !!  பக்தர்கள்  கொண்டாட்டம்   !!!

Asianet News Tamil  
Published : Sep 12, 2017, 09:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மகா புஷ்கர விழா இன்று தொடக்கம்  !!  பக்தர்கள்  கொண்டாட்டம்   !!!

சுருக்கம்

maha pushkara function

144 ஆண்டுகளுக்கு பிறகு மஹா புஷ்கர விழா இன்று தொடங்கியுள்ளது. இதையொட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பூர்வாங்க பூஜைகளும் மஹாயாகம் விமர்சையாக நடைபெற்றது.

நவக்கிரகங்களில் சுபக்கோளான குரு, துலாம் ராசிக்கு பெயர்ச்சியடைந்துள்ளார். இந்நிலையில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மஹா புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

இதற்காக, மயிலாடுதுறை காவிரி ஆற்றில் பெரிய நீர்த்தேக்கம் கட்டப்பட்டு, அங்கு காவிரி அன்னை சிலை நிறுவப்பட்டுள்ளது.

இதன் முதல் நிகழ்ச்சியாக நாட்டில் உள்ள 12 புண்ணிய நதிகளில் இருந்து நீர் எடுத்துவரப்பட்டு, மஹா யாஹங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழா நடைபெறும் துலாக்கட்ட பகுதிகள் நேற்றிரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இன்று நடைபெறும்  மஹா புஷ்கர விழாவிற்காக, நாகை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், விழாவைக் காணவரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட்..! தமிழ்நாட்டின் அச்சம் உண்மையாகிவிட்டது.. முதல்வர் பரபரப்பு கடிதம்
சீட்டு வாங்கி கொடுத்த ஓபிஎஸ்க்கு ஆப்பு வைத்த எம்பி தர்மர்..! மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்..