
காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மொத்தமாக விடுப்பு எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை நிறுத்திவிட்டு பணிக்கு செல்ல வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தமிழக அரசும் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் அரசு செயலர் பிறப்பித்த உத்தரவில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் வேலை செய்யாத நாளுக்கான சம்பளத்தை நிறுத்துவது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இடைக்கால நீக்கம் செய்வது, விடுமுறை எடுக்க தடை விதிப்பது’ போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் யார்–யார்? என்பது பற்றி துறைத் தலைவர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்