நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி அடிச்சா உடல் நலம் மேம்படுமாம் !! ஆய்வில் இப்படி ஒரு தகவல் !!

By Selvanayagam PFirst Published Jan 10, 2019, 8:56 AM IST
Highlights

பார்களில் தனியாக சென்று மது அருந்துவதைவிட நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தினால் உடல்நலம் மேம்படும் என்று லண்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பொதுவாக மது அருந்தினால் அது உடல்நலத்துக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என அனைவருமே அறிந்து வைத்திருக்கிறோம். அது உண்மையும்கூட. அதனால்தான் மது பாட்டில்களில் மது அருந்துவது உடல் நலத்துக்கு கேடு என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மதுவுக்கு எதிராக மத்திய-மாநில அரசுகள் மிகப் பெரிய அளவுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு  வருகிறது. ஏராளமான தொண்டு நிறுவனங்களும் குடிக்கு அடிமையான மனிதர்களை அதிலிருந்து மீட்கும் பணிகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்துவதால் அவர்களின் உடல் நலம் மேம்படும் என்றும், சமூகத்தில் உள்ள பல பெரிய மனிதர்களின் நட்பும் கிடைப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் பார்களில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்துவதால் அவர்களின் உடல் நலம் மேம்படும் என்றும், சமூகத்தில் உள்ள பல பெரிய மனிதர்களின் நட்பும் கிடைப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதால் நல்ல எண்ணங்கள் பிறக்கும் என்றும் அதன் மூலம் நல்ல செயல்களில் குடிப்பவர்கள் ஈடுபடுவார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்ததாக கூறப்பட்டுள்ளது.

click me!