
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக மனுதாரர் CISF-ஐ அழைத்து சென்றதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்பதாலேயே தனி நீதிபதி CISF பாதுகாப்புடன் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு இருந்தார். இதில் எந்த தவறும் இல்லை எனக்கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக, இந்த வழக்கில் கார்த்திகை தீபத் திருநாளான நேற்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றி வழிபடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் நேற்று திருப்பரங்குன்றத்தில் எப்போதும் போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் அதிரடி உத்தரவு
தமிழக அரசு அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு செய்து விட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மனுதாரர் சென்ற நிலையில், சிஆர்பிஎஃப் படையினரின் பாதுகாப்புடன் மனுதாரர் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடியாக உத்தரவிட்டார். அதன்பேரில் மனுதாரர் CISFபடையினரின் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் சென்ற நிலையில், தமிழ காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதேபோல் அங்கு திரண்ட இந்து முன்னணியினரையும் காவல்துறை அனுமதிகவில்லை.
வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார்
இதனால் காவல்துறைக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலர் காயம் அடைந்தனர். பதற்றமான சூழ்நிலை நிலவியதால் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், இந்த மனுவை தான் இரு அமர்வு நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். நீதிமன்ற அவமதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக தமிழக அரசு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார் என்று நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.