ஜாங்கிட் பதவி உயர்வு... நீக்கப்பட்டது இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் அதிரடி!!

Asianet News Tamil  
Published : Aug 02, 2017, 12:13 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
ஜாங்கிட் பதவி உயர்வு... நீக்கப்பட்டது இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் அதிரடி!!

சுருக்கம்

madras HC removes ban on jankit ips

ஜாங்கிட்டிற்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கியதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜாங்கிட் பதவி உயர்வை எதிர்த்து வித்யா என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏடிஜிபி ஜாங்கிட்டுக்கு ஜூலை 20 ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.  இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி ரியல் எஸ்டேட் அதிபர் வித்யா வழக்கு தொடர்ந்திருந்தார். 

தன்னிடம் பண மோசடி செய்த போஸ் என்பவருக்கு ஜாங்கிட் உதவி செய்ததாகவும், தன் மீது 6 பொய் வழக்குகளை போட்டு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் ஜாங்கிட் என்று  மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புகார் மனு குறித்து தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஜாங்கிட் பதவி உயர்வுக்கு இடைக்கால தடையும் விதித்துள்ளது.

இந்த தடையை எதிர்த்து ஜாங்கிட் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம் 2 வாரத்துக்கு தடை நீக்க உத்தரவிட்டுள்ளது. தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வித்யா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் ஜாங்கிட் மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மாடு பிடிச்ச தம்பிக்கு கார்.. பிடிபடாத மாட்டுக்கு டிராக்டர்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ரிசல்ட்ஸ்!
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!