
நீட் தேர்வு முடிவை வெளியிட தடை கோரும் வழக்கில் சிபிஎஸ்இ இயக்குனர் மே 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் என திருச்சி மாணவர் அபிஷேக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் தேர்வில் குறைவான கேள்விகளே வந்ததாகவும், கேள்விகளை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கபட்டிருந்தது.
மேலும், ஆங்கில கேள்விகள் மொழிமாற்றம் செய்யப்பட்டது முரணாக இருந்ததாகவும் எனவே தேர்வு எழுத கடினமாக இருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்துசிபிஎஸ்இ இயக்குனர் நாளை மறுநாளுக்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் இந்த வழக்கை மே 24 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே ஏற்கனவே நீதி தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.