தினகரனை பார்த்து பாஜக பயப்படுகிறது - புதுகுண்டு போடும் குண்டு கல்யாணம்

Asianet News Tamil  
Published : May 22, 2017, 01:13 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
தினகரனை பார்த்து பாஜக பயப்படுகிறது - புதுகுண்டு போடும் குண்டு கல்யாணம்

சுருக்கம்

gundu kalyanam says that bjp afraid of dinakaran

டிடிவி.தினகரனை பார்த்து பாஜக பயப்படுகிறது என அதிமுக பொது கூட்டத்தில் குண்டு கல்யாணம் பேசினார்.

திருப்பரங்குன்றம் பகுதியில் நடந்த அதிமுக பொது கூட்டத்தில் நடிகர் குண்டு கல்யாணம் பேசியதாவது:-

கடந்த 1972ம் ஆண்டு எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை 32 ஆண்டுகளுக்கு பின்னரும் தொடர்ந்து ஆட்சிக்கு கொண்டு வந்து வரலாறு படைத்த பெருமை ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு.

அதிமுகவை, தேர்தல் வரலாற்றில் இந்தியாவில் 3வது பெரிய கட்சியாக உயர்த்தி சாதனை படைத்தவர் ஜெயலலிதா. இத்தகைய கட்சியை ஓ.பன்னீர்செல்வம் தனது சுயநலத்திற்காக பாஜகவிடம் அடகு வைக்க பார்க்கிறார். அது ஓரு போதும் முடியாது.

இரட்டைஇலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றார் என பொய் வழக்கு போட்டார்கள். லஞ்சம் கொடுப்பவர் ஒருவர் இருந்தால், வாங்குபவர் ஒருவர் இருக்க வேண்டும். லஞ்சம் வாங்கியவர் யார் ? அதைப்பற்றி  யாரும்சொல்லவே இல்லை.

தற்போது நம்பர் 5 ராசி என்று கூறி தேர்தல் தேதியை மாற்ற சொன்னதாக கூறியதாகவும் சொல்கிறார்கள். இத்தகைய பொய் வழக்கு போட்டு டி.டி.வி.தினகரனை மடக்க பார்க்கிறார்கள்.

மக்களின் தலைவராக உள்ள தினகரனை பார்த்து பாஜக பயப்படுகிறது. எத்தனை வழக்கு போட்டாலும் அதை சட்டரீதியாக சந்தித்து முறியடித்து தினகரன் வெளியே வருவார். இரட்டை இலையையும் மீட்டு எடுப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

சட்டமன்ற தேர்தல்: காரைக்குடியில் போட்டியிடுகிறார் சீமான்..! 234 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகம்
சாதாரண டீக்கடை வைத்திருந்த ஓபிஎஸ்! மக்கள் பார்த்துட்டு இருக்காங்க! இறங்கி அடிக்கும் செல்லூர் ராஜு!