ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published : Dec 13, 2023, 05:31 PM ISTUpdated : Dec 13, 2023, 05:33 PM IST
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சுருக்கம்

டிசம்பர் 18ஆம் தேதியில் இருந்து பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35-லிருந்து ரூ.38-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44-லிருந்து ரூ.47 ஆகவும் உயரும்.

ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக பால் உற்பத்தியாளர்களின் நலன் கருதி பால் கொள்முதல் விலையை அதிகரித்து இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவகிகப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 05.11.2022 முதல் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 ஆகவும் அதிகரிக்கப்பட்டடது.

பால் உற்பத்திக்கான இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவினம் ஆகியவை அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதும், நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் தரமான பால் விற்பனை செய்யப்படுவதும் தான் பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கம். எனவே அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பபட்டது.

ரூ.6000 நிவாரணத் தொகை யாருக்குக் கிடைக்கும்? தமிழக அரசின் அரசாணை வெளியீடு

இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, 18.12.2023 முதல் பால் கொள்முதல் விலை ஊக்கத்தொகையாக ஒரு லிட்டருக்கு ரூ.3 வீதம் ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி, டிசம்பர் 18ஆம் தேதியில் இருந்து பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35-லிருந்து ரூ.38-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44-லிருந்து ரூ.47 ஆகவும் உயரும். இதன் மூலம் சுமார் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று தமிழக அரசு கூறுகிறது.

ஆவின் நிறுவனம் 3.87 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 இலட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகிறது.

பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான கலப்புத் தீவனத்தையும், கால்நடை மருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக ஆவின் நிறுவனமே வழங்கி வருகிறது.

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள் "மணிப்பூரில் வன்முறையை நிறுத்து" என முழக்கியதாகத் தகவல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜாக்பாட் அறிவிப்பு! மகளிர்களுக்கு 5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.!
வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி