காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு! 9ம் வகுப்பு மாணவியுடன் கிணற்றில் குதித்து தற்கொலை!

Asianet News Tamil  
Published : Apr 07, 2018, 05:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு! 9ம் வகுப்பு மாணவியுடன் கிணற்றில் குதித்து தற்கொலை!

சுருக்கம்

lovers Suicide for Parents against

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 9ம் வகுப்பு பள்ளி மாணவியுடன் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை சாலையில் உள்ள பாப்பாபட்டி விலக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வட்ட கிணற்றில் ஒரு ஆணும், பெண்ணும் பிணமாக மிதப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து விரைந்து வந்த போலீசார்
தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பிணங்களை சடலத்தை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றில் இறந்து கிடந்தவர் நத்தம் ராக்காச்சிபுரத்தை சேர்ந்த ராஜதுரை, என்றும் இவர் வடமதுரையில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.  மற்றும் அவருடன் பிணமாக கிடந்த பெண் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி என்பதும் தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர்.  இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் நழுவும் பிடி..! திட்டம்போடும் கனிமொழி..! மட்டம் தட்டும் திமுக தலைமை..!
டெலிவரி ஊழியருக்கு சரமாரி வெட்டு.. சென்னையில் போதை கும்பல் வெறியாட்டம்.. ஷாக் வீடியோ!