காதலனுடன் எஸ்கேப் ஆன மணப் பெண்! கல்லூரி மாணவியை கல்யாணம் செய்து வைத்த ருசிகர சம்பவம்!

 
Published : Apr 07, 2018, 02:48 PM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
காதலனுடன் எஸ்கேப் ஆன மணப் பெண்!  கல்லூரி மாணவியை கல்யாணம் செய்து வைத்த ருசிகர சம்பவம்!

சுருக்கம்

Brides escaped with her boyfriend college student became Brides

நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானதால், கல்லூரி மாணவி திடீர் மணப்பெண் ஆனார். தக்க நேரத்தில் கைகொடுத்த கல்லூரி மாணவிக்கு உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கறம்பக்குடி தாலுகா தீத்தானிப்பட்டி சண்முகநாதன் மகன் நதீஷ் என்பவருக்கும், நேற்று முன்தினம் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் தடபுடலாக செய்து வந்த நிலையில், 3-ந் தேதி இரவே மணப்பெண் திடீரென தனது காதலனுடன் எஸ்கேப் ஆனார்.

இதுகுறித்து ஆலங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென  தனது காதலனுடன் ஓடிய தகவலை அறிந்த மாப்பிள்ளை வீட்டார், நிச்சயிக்கப்பட்ட அதே நாளில், வேறு பெண்ணை பார்த்து திருமணம் நடத்தியே ஆகணும் இல்லையென்றால் ஊருக்குள் அவமானமாக ஆகிவிடும் என்று முடிவு செய்தனர்.

இதனையடுத்து  பாச்சிக்கோட்டையிலிருந்து வந்து, ஆலங்குடி படேல் நகரில் வசித்து வரும் கார்த்திக் என்பவரை மாப்பிள்ளை வீட்டார் அணுகி அவரது மகள் தேவதர்ஷினியை பெண் கேட்டனர். அதற்கு அவர், தனது மகள் கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறார். படிப்பு முடிந்த பிறகுதான் திருமணம் பற்றி யோசிக்க முடியும் என்று கூறினர்.

அதற்கு மாப்பிள்ளை வீட்டார், திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படிக்கட்டும். மேலும் வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று கூறினர். மாப்பிள்ளை வீட்டார் தங்களது நிலைமையை எடுத்து சொல்ல, மாப்பிள்ளை வீட்டாரின் கோரிக்கையை தட்ட முடியாத கார்த்திக்கும், அவரது குடும்பத்தாரும் திருமணத்திற்கு சம்மதித்தனர்.

அதன்பிறகு 3-ந் தேதி இரவே நிச்சயம் செய்து, பெண்ணை அழைத்துக்கொண்டு குமரமலை முருகன் சன்னதியில் வைத்து நதீசுக்கும், கல்லூரி மாணவி தேவதர்ஷினிக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். நிச்சயிக்கப்பட்ட பெண் காணாமல் போனாலும், தக்க சமயத்தில் கைகொடுத்த கல்லூரி மாணவி தேவதர்ஷினியை மாப்பிள்ளை வீட்டார் மற்றும் நண்பர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!