காதலியுடன் திருமணத்தை பதிவு செய்யவந்த காதலன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி...

Asianet News Tamil  
Published : Feb 07, 2018, 09:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
காதலியுடன் திருமணத்தை பதிவு செய்யவந்த காதலன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை  முயற்சி...

சுருக்கம்

lover suicide attempt who came to register his wedding

திருச்சி

காதலியுடன் திருமணத்தை பதிவு செய்யவந்த காதலன் சார்பதிவாளர் அலுவலக மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றா. இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், கே.கே.நகர் கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மதியம் ஒரு காதல் ஜோடியினர் பதிவு திருமணம் செய்வதற்காக வந்தனர்.

அப்போது, திருமணத்தை பதிவு செய்யும் நேரத்தில் காதலன் அந்த அலுவலகத்தை விட்டு ஓடி, அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஏறி கீழே குதித்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து கே.கே.நகர் காவலாளார்கள் நடத்திய விசாரணையில், "அந்த காதலன்  திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. முடித்த இளைஞர் என்பது தெரிய வந்தது.

இவர் பட்டதாரி பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த திருமணத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் நேரத்தில் அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி தப்பியோடுவதற்காக சார் பதிவாளர் அலுவலகத்தின் மொட்டை மாடிப் படியில் இருந்து கீழே குதித்தபோது பலத்த காயமடைந்ததும் விசாரணையில் தெரிந்தது" என்று காவலாளர்கள் தெரிவித்தனர்.

இது ஒருபக்கம் இருக்க, "அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காதலனை அவரது காதலி அழைத்துக் கொண்டுச் சென்றுவிட்டார்" என்று மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இனி மாதம் ரூ.3000 வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலினின் தடாலடி அறிவிப்பு!
மழைநீர் வடிகாலில் கொசுவலை போடப்பட்டது சர்ச்சையான நிலையில் மேயர் பிரியா விளக்கம்