
லாட்டரி அதிபர் மார்ட்டின்
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது உறவினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. அதன் அருகில் மார்டின் ஹோமியோபதி மருத்து கல்லூரி மருத்துவமனை மற்றும் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் அண்டு இன்ஸ்ட்டியூசன் என்ற பெயரில் கார்ப்ரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலையிலிருந்து நடைபெற்று வரும் சோனையில் 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
அமலாக்கத்துறை சோதனை
மேலும் சோதனை நடைபெற்று வரும் கார்ப்ரேட் அலுவலகம் அருகே 10 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குவிந்துள்ளனர். இதே போல சென்னை போயஸ் தோட்ட அலுவலகத்தில் ஏழு பேர் கொண்ட அதிகாரிகள் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போயஸ் தோட்டத்தில் உள்ள இந்த அலுவலகம் லாட்டரி மருமகன் ஆதவ் அர்ஜுன் என்பவருக்கு சொந்தமானதாகும். ஆதார் அர்ஜுன் தமிழ்நாடு பேஸ்கட்பால் சங்க தலைவராக உள்ளார். அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான விவரங்கள் தெரியவரும். சமீபத்தில் மார்டினுக்கு சொந்தமான 173 கோடி ரூபாய் மதிப்பிலான, சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்
தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது ஏன்.? முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்