Omni Bus Accident: லாரி - தனியார் சொகுசு பேருந்து நேருக்கு நேர் மோதல்.. 2 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!

Published : Dec 16, 2023, 07:34 AM ISTUpdated : Dec 16, 2023, 07:37 AM IST
Omni Bus Accident: லாரி - தனியார் சொகுசு பேருந்து நேருக்கு நேர் மோதல்.. 2 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!

சுருக்கம்

சென்னையில் இருந்து நேற்று இரவு பயணிகளுடன் அறந்தாக்கி நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து  உளுந்தூர்பேட்டை அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் மோதி எதிர்திசையில் சென்றது. 

உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சென்னையில் இருந்து நேற்று இரவு பயணிகளுடன் அறந்தாக்கி நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து  உளுந்தூர்பேட்டை அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் மோதி எதிர்திசையில் சென்றது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது சொகுசு பேருந்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த விபத்தில் ஆம்னி சொகுசு பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் இருவரும் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 20 பயணிகள் படுகாயமடைந்தனர். 

இதையும் படிங்க;- ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.. தொழில் நகரமான கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது.. வானதி சீனிவாசன்.!

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 14 December 2025: முதல்வர் ஸ்டாலினின் பயணம் முதல் முட்டை விலை உயர்வு வரை.. இன்றைய முக்கிய செய்திகள்
தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்