மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகவுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இதில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக போட்டியிடுகிறது.
IT RAID : ஜி ஸ்கொயர் நிறுவனத்தை சுற்றி வளைத்த வருமான வரித்துறை.. திடீர் சோதனையால் பரபரப்பு
மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையையும், வேட்பாளர்கள் பட்டியலையும் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் தமிழ்நாடு, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகவுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் முடிவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.