திமுகவிற்கு திடீர் ஆதரவு தெரிவித்த கருணாஸ்.! அதிமுக, பாஜகவிற்கு எதிராக களம் இறங்கியது ஏன்.?

By Ajmal Khan  |  First Published Mar 21, 2024, 10:33 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் கருணாஸ், பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது என கூறியுள்ளார்.


திமுக கூட்டணிக்கு ஆதரவு

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டியானது நிலவுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. அந்த வகையில்  முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித்தலைவரும் நடிகருமாண  சே. கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது.

Tap to resize

Latest Videos

அதற்கான களமாக இந்த நாடாளு மன்றத்தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும். மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க 'இந்தியா கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் தி.மு.கவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.

பாஜகவை வீழ்த்த பிரச்சாரம்

இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்திய பெருமுதலாளிகளின் கையில் கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அடிமை துரோகக் கட்சியான அ.தி.முக வை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும். தி.மு.க.விற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில்

பலம் வாய்ந்த இக் கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய திமு.க.விற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அ.தி.மு.க.வை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என கருணாஸ் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

கள்ளகுறிச்சி தொகுதியில் சஸ்பென்ஸ் வைத்த இ.பி.எஸ்., ஒரே விளம்பரத்தில் மொத்தமாக உடைத்த எம்எல்ஏ

click me!