சிஎஸ்கே போட்டியை பார்க்க வாரீங்களா.? இலவசமாகவே பேருந்தில் செல்லலாம்- வெளியான முக்கிய அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Mar 21, 2024, 9:21 AM IST

ஐபிஎல் போட்டியில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணிகளுக்கு இடையேயான போட்டியை பார்க்க செல்பவர்கள் இலவசமாகவே பேருந்தில் பயணிக்கலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


சென்னையில் ஐபிஎல் போட்டி தொடக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்கவுள்ளது. இந்த போட்டியை பார்க்க பல்வேறு இடங்களில் இருந்து ரசிகர்கள் சென்னையை முற்றுகையிட தொடங்கியுள்ளனர். இந்த போட்டிக்கான டிக்கெட் கடும் டிமாண்டாக உள்ளது. 2 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட் 5ஆயிரம் முதல் 10ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இருந்த போதும் தோனி மற்றும் கோலியை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர். அதே நேரத்தில் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் வகையில், கிரிக்கெட் போட்டியை நேரடியாக பார்க்க வருபவர்கள் சென்னை பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

பேருந்தில் இலவச பயணம்

இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், IPL போட்டியை காணவரும் பார்வையாளர்கள் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணச்சீட்டு பெறாமல் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  IPL போட்டிகளைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, Chennai super kings cricket limited மாநகரப் போக்குவரத்து கழகத்தில் முன்னதாக பணம் செலுத்தி போட்டியை காண வருபவர்களின் வசதிக்காக online/ pre printed டிக்கெட் வைத்திருந்தால் போட்டி நடைபெறும் மூன்று மணி நேரத்திற்கு முன்பு பிற இடங்களில் இருந்து சிதம்பரம் விளையாட்டு மைதானத்திற்கும் போட்டி முடிந்த பின்பு மூன்று மணி நேரத்திற்குள் மைதானத்தில் இருந்து பிற இடங்களுக்கும் பயணச்சீட்டு பெறாமல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் என்ன.?

மேலும் பயணி டிக்கெட் வைத்துள்ளாரா என உறுதி செய்த பின்னர் நடத்துநர் அவர்களை பயணிக்க அனுமதிக்க வேண்டும். Online / pre printed டிக்கெட்டில் போட்டி நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி நடைபெறும் நாளில் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,  இதுகுறித்து பயண சீட்டு பரிசோதகர்களுக்கும் அறிவுறுத்த வேண்டுமென போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

IPL 2024: பஞ்சாயத்து இருந்தாலும், ரோகித் சர்மாவை பாசத்துல கட்டியணைத்த ஹர்திக் பாண்டியா – வைரல் வீடியோ!

click me!