அதிமுக கூட்டணியில் தேமுதிக.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய பிரபாகரன் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 16 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்கள் கூட்டணியில் தேமுதிக.வுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
undefined
இதனிடையே தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுவை பெற்று வருகிறது. இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயாகந்த்தின் மகன் விஜய பிரபாகரன் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மத்திய சென்னை, தருமபுரி, கடலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர் என 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.