அப்படியே நொறுங்கி விழுந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம்... சிக்கியது கோல்டு லாக்கர்!

 
Published : Jun 17, 2017, 05:25 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
அப்படியே நொறுங்கி விழுந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம்... சிக்கியது  கோல்டு லாக்கர்!

சுருக்கம்

locker fells down while destroying the chennai silks building contractor

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் இடிக்கும் பணியில் 3 டன் எடை கொண்ட தங்க பெட்டகம் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 31 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. 7 அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டிடம் முழுவதும் தீ பரவியது. இந்த தீயை அணைக்க 2 நாட்கள் ஆனது. தீ விபத்தில் கட்டிடம் முழுமையாக பாதிக்கப்பட்டதால், அதை இடிக்க முடிவு செய்யப்பட்டு 2 ஆம் தேதி முதல் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஜா கட்டர் எனப்படும் நவீன எந்திரத்தை கொண்டு இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை கட்டிடத்தின் கான்கிரீட் தூணை இடிக்கும் பணியின் போது, முன்பகுதி இடிந்து விழுந்தது.

மீதமுள்ள பகுதிகள் இன்று மாலைக்குள் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கட்டடம் இடிப்பின்போது 6-வது மாடியில் இருந்த தங்க லாக்கரும் சரிந்து விழுந்துள்ளது. 3 டன் எடை கொண்ட தங்க பெட்டகம் பத்திரமாக மீட்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!
அமெரிக்க வரி விதிப்பால் சிக்கலில் தமிழகத்தின் ஏற்றுமதித்துறை.. பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்