
கரூர்
ஊதிய உயர்வு கேட்டு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் என்.ராஜூ தலைமை வகித்தார். துணை தலைவர் ஆர்.முருகன், ஆர்.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், செயலாளர் சி.முருகேசன், கா. கந்தசாமி, டாஸ்மாக் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கரூர், குளித்தலை நகராட்சிகள் மற்றும் பள்ளபட்டி, அரவக்குறிச்சி, புலியூர், பு.புகழூர், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, உப்பிடமங்கலம், நங்கவரம், பழையஜெயங்கொண்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிகளில் பணியாற்றும் ஒப்பந்த தினக்கூலி, சுயஉதவிக்குழு, துப்புரவு பணியாளர்களுக்கு தொழிலாளர் துறையின் உத்தரவின்படி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யக்கோரி நடைபெற்றது.
நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.13,725 வழங்க வேண்டும்,
பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.11,725 வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது.
இதில், துப்புரவு பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்,