
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள டெக்கான் என்ற பிரபல தனியார் உணவகத்தில் அப்பாஸ் என்பவர் நேற்று மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்போது பிரியாணியில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஓட்டல் ஊழியர்களை அழைத்து பிரியாணி தட்டை காண்பித்த அப்பாஸ், பல்லி இருப்பது குறித்து முறையிட்டுள்ளார்.அதற்கு உணவக ஊழியர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதோடு, அருகில் தான் மருத்துவமனை உள்ளது நீங்கள் அங்கே சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என அலட்சியமாக பதிலளித்தாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அப்பாஸ் பேசிய விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.அதில் ஒரு வேலையாக புரசைவாக்கம் வந்த நான், மதிய உணவு உண்பதற்கு சரவணா ஸ்டோர்ஸ் அருகில் உள்ள டெக்கான் என்ற ஹோட்டலுக்கு சென்றேம். மேலும் உணவகத்தில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து பாதி பிரியாணி சாப்பிட்டு முடித்த பிறகு அதில் பல்லி இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு உணவக ஊழியர்களிடம் கூறியதற்கு முறையாக பதில் அளிக்காமல் மெத்தனமாக செயல்பட்டனர். சிறிதும் மனிதாபமானமின்றி செயல்பட்டனர் என வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும் சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றேன். ஆனாலும், வயிறு வலி தொடர்ந்து இருந்து வருகிறது. என் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அந்த ஓட்டல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மட்டன் பிரியாணியில் பல்லி கிடந்தது உண்மை தான் என்றும் நானே அதனை பார்த்தேன் என்றும் ஹோட்டல் ஊழியர் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று தற்போது ஏசியாநெட் வலைதளத்திற்கு எக்ஸ்குளுசிவ் ஆக கிடைத்துள்ளது. அதில் ஒருவர் சாப்பாட்டில் எப்படி பல்லி வந்தது என்று கேள்வியெழுப்ப, அதற்கு அந்த ஊழியர் அதான் சார் தெரியல.உணவகத்தில் சிலீங் எல்லாம் எப்பவும் சுத்தம் செய்துதான் வைத்து உள்ளோம். சில நாட்களுக்கு முன்பு கூட அதிகாரிகள் சோதனை செய்து சென்றனர் என்று கூறிகிறார். மேலும் உணவில் பல்லி இருப்பதை அவர் காட்டும் போது தான் எங்களுக்கே தெரிந்தது என்றும் நான் பல்லி இறந்த நிலையில் பிரியாணியில் இருந்ததை பார்த்தேன் என்றும் சொல்லுகிறார். தற்சமயம் ஹோட்டல் ஊழியர் பேசியுள்ள இந்த வீடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.