பிபர்வரி 16 ந்தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு...பொருட்காட்சி நடத்த அனுமதி.. தமிழக அரசு உத்தரவு..

Published : Feb 12, 2022, 04:00 PM IST
பிபர்வரி 16 ந்தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு...பொருட்காட்சி நடத்த அனுமதி.. தமிழக அரசு உத்தரவு..

சுருக்கம்

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, முதலமைச்சர் தலைமையில் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அலோசனை கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 22-1-2022 அன்று 30,744 ஆக இருந்த நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  11-2-2022 அன்று 3,086 ஆக குறைந்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ – மாணவியர்களின் எதிர்காலம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை மீள திரும்புவதற்கு ஏதுவாகவும், தமிழ்நாடு அரசால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இருந்த போதிலும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திடவும், குறைத்திடவும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் 16-2-2022 முதல் 2-3-2022 வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும். மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழைலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools)  திறக்கஅனுமதியளிக்கப்படுகிறது.பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது. கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை.. வீடு தேடி வரும் குழு.. சூப்பர் அறிவிப்பு!
நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! போர்க்களமாக மாறிய போயஸ்கார்டன்