சென்னையில் அதிர்ச்சி.. பிரபல ஓட்டல் மட்டன் பிரியாணியில் கிடந்த பல்லி.. சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயக்கம்..!

Published : Feb 12, 2022, 10:49 AM ISTUpdated : Feb 12, 2022, 10:56 AM IST
சென்னையில் அதிர்ச்சி.. பிரபல ஓட்டல் மட்டன் பிரியாணியில் கிடந்த பல்லி.. சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயக்கம்..!

சுருக்கம்

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டலில் அப்பாஸ் என்பவர் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பல்லி செத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டலில் அப்பாஸ் என்பவர் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பல்லி செத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  

சென்னையில் பல வகையான உணவுகள் இருந்தாலும் பிரியாணிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இளைஞர்கள் வகை வகையான உணவை சுவைக்க வேண்டி பல இடங்களுக்குச் செல்கின்றனர். குறிப்பாக பிரியாணியை சாப்பிடுகின்றனர். சிக்கன், மட்டன், இறால் என பல வகையான பிரியாணி உள்ளது. அதில் பாசுமதி அரிசி பிரியாணி, சீரக சம்பா பிரியாணியை அதிகமானோர் விரும்பி சாப்பிடுகின்றனர். 

இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டலில் அப்பாஸ் என்பவர் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பல்லி செத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சிறிது நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

அதில், மதியம் ஒரு வேலையாக புரசைவாக்கம் வந்தேன். அங்கு பிரபல ஓட்டல் ஒன்றில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டு இருந்தேன். கடைசி வாயில் வைக்கும் போது பல்லி ஒன்று செத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆனேன். ஆனாலும், வயிறு வலி தொடர்ந்து இருந்து வருகிறது. என் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அந்த ஓட்டல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா? விஜய் அரசின் அடுத்த பிளான் என்ன?