தீபாவளியை முன்னிட்டு கலைக்கட்டும் மது விற்பனை... அதிக விலைக்கு விற்பதாக மதுபிரியர்கள் குற்றச்சாட்டு!!

By Narendran SFirst Published Oct 21, 2022, 8:51 PM IST
Highlights

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 330 டாஸ்மாக் மது விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பல நாட்களாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் பில் கேட்டாலும் கொடுக்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: நெருங்கும் தீபாவளி பண்டிகை... சென்னையில் பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு!!

இதனிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை கலைக்கட்டியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரண்டே நாட்களில் சுமார் 431.03 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. அதேபோல் இந்த ஆண்டும் டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை... வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிவிப்பு!!

இந்த நிலையில் தீபாவளியை பயன்படுத்தி  சேலத்தின் பல கடைகளில் தற்போது மதுபானம் ஒன்றிற்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. MRP விலையை சுட்டிக்காட்டி வாக்குவாதம் செய்தால், கடை ஊழியர்கள் 10 ரூபாயை திருப்பி தருகின்றனர். சேலத்தின் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் இந்த நிலையே காணப்படுவதாக கூறப்படுகிறது. 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மதுபானம் 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

click me!