
மதுபான விலையை ரூ. 12 வரை உயர்த்த இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது
முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரைவை கூட்டம் நடைபெற்றது
இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதிய குழு அளித்த பரிந்துரையின் படி, 20 % வரை ஊதியம் உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது .மேலும் மதுபானங்களின் விலை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது
காரணம்
தமிழகத்தில், 3000 கும் மேற்பட்ட மதுபான கடைகள் மூடப்பட்டதன் விளைவாக விற்பனை குறைந்து போன நிலையில்,மாநில அரசுக்கு வருவாய் ஈட்டும் பொருட்டு,நஷ்டத்தை ஈடுசெய்யவும் மதுபானங்களின் விலை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது
அதன்படி,
மதுபானம் விலையை ரூ.12 வரை உயர்த்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.12 வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் பீர் விலையை பாட்டிலுக்கு ரூ.5 அதிகரிக்கவும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக புதுச்சேரியில் மதுபானங்களின் விலை நேற்று முன்தினம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .இதனால் குடிமகன்கள் சற்று அப்சட் ஆகி உள்ளனர்