2000-க்கு சில்லறை தேடியே வாழ்க்கை முடிஞ்சிடும் போல…

Asianet News Tamil  
Published : Nov 30, 2016, 08:59 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
2000-க்கு சில்லறை தேடியே வாழ்க்கை முடிஞ்சிடும் போல…

சுருக்கம்

பொம்மிடி,

ஏ.டி.எம். மையத்தில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் தான் கிடைக்குது. அந்த் 2000-க்கு சில்லறை தேடியே வாழ்க்கை முடிஞ்சிடும் போல! என்று வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் கூறினர்.

கடந்த 8–ஆம் தேதி இரவு, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி தடாலடியாய் அறிவித்து மக்கள் மத்தியில் குண்டைத் தூக்கிப் போட்டார். பழைய நோட்டுக்குப் பதிலாக புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்றும், பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.

இதனையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வங்கிகள் மற்றும் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் செலவுக்கு பணம் எடுக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இப்போது, ஒரு நாளைக்கு ஏ.டி.எம்களில் 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடிகிறது. மாவட்டம் முழுவதும் புதிய 2 ஆயிரம் ரூபாய் ஒரு நோட்டு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த புதிய ரூபாய் நோட்டுக்கு சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சில்லரை மாற்ற பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இதனால் மாவட்டத்தில், சிறு சிறு வணிகர்களான காய்கறி மார்க்கெட், வார சந்தைகளில் வியாபாரம் மற்றும் விற்பனை முடங்கியது. ஆனால், கார்டு வைத்துள்ளவர்கள் சூப்பர் மார்க்கெட், மால் என சென்று முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்கின்றனர். மோடியின் செல்லாத நோட்டுகள் அறிவிப்பு முதலாளிகளுக்கு சாதகமாக எடுக்கப்பட்டது என்பதை தான் இது நிரூப்பிக்கிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க அதிகாலை முதலே சென்று நீண்ட வரிசையில் காத்து நின்றனர் பொதுமக்கள்.

பொம்மியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நீண்ட வரிசையில் ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமே காத்திருக்கின்றனர். முதலாளிகள், அரசியல்வாதிகள் ஏன் கவுன்சிலர் கூட வரிசையின் நின்று நாங்கள் பார்த்ததில்லை. இது என்ன நியாயம்? கருப்பு பணத்தை பிடிக்க வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், அதற்கு எங்களை ஏன் குற்றவாளி போல பார்க்கிறீர்கள்? இந்த அறிவிப்பு மக்களின் இயல்பு நிலையை வெகுவாக பாதித்துள்ளது. ஏ.டி.எம், வங்கிகளில் பணம் இல்லை என்று கூறுகிறார்கள்.அப்படியே பணம் தந்தாலும் அது 2000 ரூபாய் நோட்டாக இருக்கிறது. அந்த 2000-க்கு சில்லறை தேடியே வாழ்க்கை முடிஞ்சிடும் போல! என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.  

PREV
click me!

Recommended Stories

சென்னை–பெங்களூரு புல்லெட் ரயிலில் பெரிய திருப்பம்! கோயம்புத்தூருக்கும் புல்லெட் ரயிலா?
பயன்பாட்டுக்கு வராத பயனற்ற ஓய்வூதிய திட்டம்..! அரசு ஊழியர்களை ஏமாற்ற முடியாது.. அன்புமணி கொந்தளிப்பு