செல்போனில் பேசியபடி வண்டி ஓட்டுறீங்களா….ஜாக்கிரதை உங்க லைசென்ஸ் உடனடியா ரத்து செய்யப்படும்…

First Published May 9, 2017, 8:31 AM IST
Highlights
Licence cancel for cell phone speaking reiders


செல்போனில் பேசியபடி  வாகனம் ஓட்டினால், உடனடியாக ஓட்டுனர் லைசென்சை ரத்து செய்யும்படி, அரசு போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளார். 

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில், விபத்து உயிரிழப்புகள் ஏற்படுவதால் அதனைத்  தடுப்பது குறித்து, உச்ச நீதிமன்றத்தின் சாலை பாதுகாப்பு குழு விவாதித்தது. அந்த குழு,  மோட்டார் வாகனம் மற்றும்  சாலை பாதுகாப்பு விதிகளை கடுமையாக கண்காணிக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, அதிவேக பயணம், போதையில் வாகனம் ஓட்டுதல், மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரின்  லைசென்ஸ், உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியது.

 

தமிழகத்தைப் பொருத்தவரை  2017 காலாண்டில் மட்டும், அதிவேகமாக பயணம் செய்த, 61 ஆயிரத்து, 177 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், ஒருவரின் லைசென்சும் ரத்து செய்யப்படவில்லை. அதே போல, 71 ஆயிரம் பேர் மீது, போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதியப்பட்டும், யாருடைய லைசென்சும் ரத்தாகவில்லை.

இந்நிலையில் இத்தகைய  விதிமீறல்களுக்கு, உடனடியாக லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும் என சாலை பாதுகாப்புக் குழு அறிவுறுத்தியதையடுத்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி செல்போனில் பேசியபடி  வாகனம் ஓட்டினால், உடனடியாக ஓட்டுனர் லைசென்சை ரத்து செய்யும்படி, அரசு போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்

 

 

click me!