
வியாபார ரீதியாக குலதெய்வத்தின் பெயரை பயன்படுத்தலாமா?
குலதெய்வ வழிபாடு என்பது ஒரு குலத்தையே காக்கும் தெய்வத்தை வழிபடுவதே என்று கூறலாம்.
எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும், குல தெய்வத்தை வழிபட்டு பின்னர் தான் செயலில் ஈடுபடுவார்கள்
குலதெய்வம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் சொல்லப்படுகிறது. ஒருவர் எவ்வளவு பு ஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுக்கிரகம் இல்லாமல் போனால் அந்த புஜைகளும் பரிகாரங்களும் பலன் தராது என்பதே ஜோதிட சாஸ்திரத்தின் அசைக்க முடியாத கருத்தாக உள்ளது
அதற்காக ஒரு சிலர் குலதெய்வத்தின் பெயரை வியாபார ரீதியாக பயன்படுத்துகிறார்கள். அவரவர் குலதெய்வத்தின் பெயரை வியாபார ரீதியாக பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அதே சமயத்தில் குலதெய்வத்தின் பெயரை பயன்படுத்துவதற்கு முன்பு அதன்மூலம் நமக்கு லாபம் கிடைக்குமா? என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஜாதகம் என்ன சொல்கிறது தெரியுமா ?
அவரவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு 5-ம் இடம் என்பது குலதெய்வத்தை குறிக்கும் இடமாகும். இந்த 5 ம் இடத்து அதிபதி லக்னத்துக்கு 5,9,4,7,10 போன்ற இடங்களில் அமைந்திருந்தாலும் சரி - அல்லது உச்சம் அடைந்திருந்தாலும் அவர்களுக்கு நன்மை உண்டாகும்.
மேலும், ஐந்தாம் இடத்துக்கு குருவின் பார்வை இருந்தாலும் அவரவர் குலதெய்வத்தின் பெயரை வியாபார ரீதியாக பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கு அனைத்து விதத்திலும் நல்ல லாபம் கிடைக்கும்.
ஐந்தாம் இடத்துக்கு அதிபதி பலன் தராத கெட்ட ஸ்தானங்களில் அமர்ந்து பாதகத்தை விளைவிக்கக்கூடிய பாதக ஸ்தான அதிபதியின் பார்வை ஐந்தாம் இடத்துக்கோ அல்லது ஐந்தாம் இடத்து அதிபதிக்கோ ஏற்பட்டிருந்தால் குலதெய்வத்தின் பெயரை வியாபார ரீதியாக பயன்படுத்தினால் அதில் திருப்தியான பலன்களை எதிர்பார்க்க முடியாது.
குலதெய்வமும் , குலதெய்வ பெயர்களும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம்.