கோவில் யானைக்கு ரூ.12,000 மதிப்பில் செருப்பு.. தமிழகத்திலே முதல் முறையாக..காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

Published : Jul 02, 2022, 05:27 PM IST
கோவில் யானைக்கு ரூ.12,000 மதிப்பில் செருப்பு.. தமிழகத்திலே முதல் முறையாக..காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

சுருக்கம்

நெல்லையப்பர் கோவில் யானை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் , யானைக்கு ரூ.12,000 மதிப்பில் தோல் செருப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால் வலியால் யானை அவதியுறாமல் இருக்க பக்தர்கள் ரூ.12,000 மதிப்புள்ள 4 தோல் செருப்புகளை வழங்கியுள்ளனர்.  

திருநெல்வேலி நகர்ப்‌ பகுதியில்‌ உள்ள  2000 ஆண்டுகள்‌ பழமை வாய்ந்த நெல்லையப்பர்‌ கோவில் யானையின் பெயர் காந்திமதி. 13 வயதில் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட இந்த யானைக்கு தற்போது 52 வயது ஆகிறது. இநிலையில் சமீபத்தில் உடல்நலைக்குறைவு காரணமாக யானை பரிசோதித்த மருத்துவ குழுவினர், யானை வயதுக்கேற்ற எடையை விட 300 கிலோ அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் எடையை குறைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திடம் அறிவுறுத்தினர்.

மேலும் படிக்க:புதுச்சேரியில் முக கவசம் கட்டாயம்.. மிரட்டும் கொரோனா.. 4 மாதங்களுக்கு பிறகு 100 தாண்டிய பாதிப்பு..

இதனால் நாள்தோறும்‌ யானையை நடைபயிற்சி அழைத்துச்‌ செல்வது, அதிக இனிப்பு உள்ள கரும்பை குறைவாக கொடுப்பது, நார்ச்சத்து மிகுந்த உணவு அதிகம்‌ கொடுப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது. தொடர்‌ உணவு கட்டுப்பாடு மற்றும்‌ பயிற்சிகளை மெற்கொண்டதில், யானை 6 மாதத்தில்‌ சுமார் 150 கிலோ எடை குறைந்துள்ளது. தற்போது யானை சரியான எடையை அடைந்திருந்தாலும்‌, வயது முதிர்வின்‌ காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான ரூ.234 கோடி முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி !

இதனால்‌ யானை நீண்ட நேரம்‌ நடப்பதற்கும்‌, நிற்பதற்கும்‌ முடியாமல் சிரமப்படுகிறது. எனவே நடக்கும் போது கால் வலி ஏற்படாமல் இருக்க, யானை காந்திமதிக்கு மருத்துவ குணம்‌ வாய்ந்த ரூபாய்‌ 12,000 மதிப்பிலான தோல்‌ செருப்பை செய்த பக்தர்கள்‌ வழங்கியுள்ளனர். மேலும் மூட்டு வலியிலிருந்து தப்பிக்கவும்‌ மருத்துவ குணம் கொண்ட செருப்பு உதவியாக இருக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். தமிழகத்திலேயே நெல்லையப்பர்‌ காந்திமதி அம்மன்‌ கோயில்‌ யானைக்குதான்‌ முதல்‌ முதலாக செருப்பு அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:பயணிகளே கவனத்திற்கு !! சென்னை டூ தாம்பரம் வரும் ஜூலை 4 ஆம் தேதி அனைத்து மின்சார இரயில்களும் ரத்து..

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!