ஆம்பளனு மரியாதை கொடுக்குறேன் இல்லனா அவ்வளவுதான்.. ஒருமையில் பேசிய வழக்கறிஞரை அலறவிட்ட பெண் போலீஸ்.!

Published : May 05, 2022, 10:05 AM IST
  ஆம்பளனு மரியாதை கொடுக்குறேன் இல்லனா அவ்வளவுதான்.. ஒருமையில் பேசிய வழக்கறிஞரை அலறவிட்ட பெண் போலீஸ்.!

சுருக்கம்

ஆத்திரமடைந்த ராபர்ட் பெண் காவலரை ஒருமையில் பேசி, சட்டை பட்டன்களை கழற்றிவிட்டு அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார். ஆம்பளனு மரியாதை கொடுக்குறேன் இல்லனா அடி பொளந்துடுவேன் என பெண் காவலர் அவரை எச்சரித்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெண் காவலர் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் வழக்கறிஞர் ஒருவர் குடிபோதையில் பெண் போக்குவரத்துக் காவலரை ஒருமையில் பேசி அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை பழைய பாலக்கரை சாலையில் ஒரு தம்பதி தங்களுக்குள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த  ராபர்ட் என்பவர் ஏன் சண்டையிடுகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது,  அந்த நபர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் நீங்கள் யார்? ராபர்ட்டிடம் கேட்டுள்ளனர். அதற்கு தாம் ஒரு வழக்கறிஞர் என்று கூறி தம்பதியை ராபர்ட் மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து, அந்த தம்பதி அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் காவலரிடம்  முறையிட்டுள்ளனர். அவரும் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? என்று ராபர்ட்டியிடம் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராபர்ட் பெண் காவலரை ஒருமையில் பேசி, சட்டை பட்டன்களை கழற்றிவிட்டு அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார். ஆம்பளனு மரியாதை கொடுக்குறேன் இல்லனா அடி பொளந்துடுவேன் என பெண் காவலர் அவரை எச்சரித்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெண் காவலர் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!