சற்றுமுன் முக்கிய தகவல்.. முகக் கவசம் கட்டாயமில்லை.. சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்..

Published : May 05, 2022, 09:58 AM IST
சற்றுமுன் முக்கிய தகவல்.. முகக் கவசம் கட்டாயமில்லை.. சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்..

சுருக்கம்

தேர்வறையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை  என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணண் தெரிவித்துள்ளார். மேலும் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேற்று எவ்விதமான அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.   

 பிளஸ் 2 பொதுத்தேர்வு:

தமிழகம்‌, புதுவையில்‌ மாநில பாடத்‌ திட்டத்தில்‌ பிளஸ்‌ 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்‌ தேர்வு 3,119 மையங்களில்‌ இன்று தொடங்குகிறது. இந்தத்‌ தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள்‌ எழுதவுள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு மையத்திற்கு மாணவர்கள் 9 மணிக்கு வர வேண்டும். காலை 10 மணி முதல்‌ பகல்‌ 1.15 மணி வரை தேர்வுகள்‌ நடைபெறும்‌. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

ஓராண்டுக்கு தேர்வெழுதத்‌ தடை :

பொதுத்‌ தேர்வுகளில்‌ காப்பி அடித்தால்‌, அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுதத்‌ தடை விதிக்கப்படும்‌.  தேர்வில்‌ ஆள்‌ மாறாட்டம்‌ செய்தால்‌, அடுத்து தேர்வு எழுத வாழ்நாள்‌ தடை விதிக்கப்படும்‌ என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்வறைக்குள் செல்போன் போன்ற மின்சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

முகக்கவசம் கட்டாயமில்லை :

இந்நிலையில் தற்போது தேர்வறையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை  என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணண் தெரிவித்துள்ளார். மேலும் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேற்று எவ்விதமான அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக தேர்வு மையத்தில் மாணவர்கள், ஆசிரியர், கண்காணிப்பாளர் என அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று உத்தரவு வெளியானது. இந்நிலையில் தற்போது முக கவசம் கட்டாயமில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்.. பிளஸ் 2 தேர்வு இன்று தொடக்கம்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?