பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு….இளைஞர்கள் வெறிச் செயல்….

 
Published : Dec 24, 2016, 08:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு….இளைஞர்கள் வெறிச் செயல்….

சுருக்கம்

பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு….இளைஞர்கள் வெறிச் செயல்….

வேலூரை அடுத்த  திருப்பத்தூரில் இளைஞர்கள் இருவர்  பெண் போலீஸ் மீது ஆசிட் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் என்.ஜி.ஓ., நகரை சேர்ந்தவர் லாவண்யா, திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணி  புரிந்து வரும் இவர், நேற்றிரவு , காவல் நிலையத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த இளைஞர்கள்  இருவர், இரண்டு பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த ஆசிட்டை லாவண்யா மீது வீசிவிட்டு தப்பி  சென்றனர்.

இதனையடுத்து வலியால் துடித்த லாவண்யாவை  மீட்ட காவல் துறையினர் அருகிலுள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர்  ஆசிட் வீசிய மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். பெண் போலீஸ் மீது ஆசிட் வீசிய சம்பவம் திருப்பத்துர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!