
ஜெர்மனியிலிருந்து இரண்டு மாதத்துக்கு முன்னர் நவீன ரக ஏணி வேன் தீயணைப்புத்துறைக்கு வாங்கப்பட்டது. இந்த வேனை பயன்படுத்தி தற்போது சென்னை சில்க்ஸில் பரவி வரும் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இந்த நவீன ரக வேனை இங்குதான் முதல்முறையாக அது பயன்படுத்தப்பட்டது.
தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடையான சென்னை சில்க்ஸில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து 15 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் கடந்த 10 மணி நேரமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என தீயணைப்பு துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தி.நகர் பகுதியே புகை மண்டலாமாக கட்சி அளிக்கிறது. மேலும் சென்னை சில்க்ஸ் அமைந்துள்ளஉஸ்மான் சாலை , மேம்பாலம் , உள்ளிட்ட பல பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்பட வில்லை.
தீயை கட்டுபடுத்த முடியாததால் இரண்டு மாதங்களுக்கு முன் தீயணைப்பு துறைக்கு என்று ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட்ட நவீன ரக வேன் கொண்டு வரப்பட்டது.
ஆனால் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுலதால் கட்டிடத்தை இடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
7 மாடி கட்டிடம் வலுவிழந்து காணப்படுவதால் அக்கட்டிடத்தை இடிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த வேன் மூலம் தி.நகரில் தான் முதன்முறையாக தீயணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.