
சென்னை சோழிங்கநல்லூரில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழி தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல குழி தோண்டும் பணி நடைபெற்று வந்தது. நிலத்தில் சுமார் 5 அடிக்கும் அதிகமாக குழி தோண்டப்பட்ட நிலையில், திடீரென மண் சரிந்தது விழுந்தது.
இதில் இரண்டு தொழிலாளர்கள் அடியில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதன் பேரில் அங்கு விரைந்த வீரர்கள், மண் சரிவிற்குள் சிக்கிக் கொண்டவர்களை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இம்மீட்புப் பணியில் வந்தவாசியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பிணமாக மீட்கப்பட்டார்.
கீழ்ப்புதூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற மற்றொரு தொழிலாளரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண் தளர்ந்த இடத்தில் குழி தோண்டியதே விபத்துக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
வழக்குப் பதிவு செய்த சோழிங்கநல்லூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.