என்னது! மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையமா? ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு குற்றச்சாட்டு தரமான பதிலடி கொடுத்த எல்.முருகன்!

By vinoth kumar  |  First Published May 24, 2024, 7:53 AM IST

அரசியல்வாதிகள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தனது பணியை மேற்கொண்டு வருகிறது.


மோடியின் அலுவலக ஊழியராக தேர்தல் ஆணையம் செயல்பட்டு இருந்தால் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் எவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும் என ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு வருகை புரிந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு சங்கர மடம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் காஞ்சி சங்கர மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.  அதனைத் தொடர்ந்து இருவரும் 15 நிமிடம் தனிமையில் ஆலோசனை நடத்தினர். அதன்பின் அமைச்சர் முருகனுக்கு,  சங்கர மடம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: கமலாலயத்தில் மாட்டிறைச்சி சமைத்து வையுங்கள் அது தான் பிடிக்கும்; அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளி மாநில ஆன்மீக சுற்றுப்பயணத்தில் இருந்து தற்போது திரும்பி உள்ள நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக அவரை சந்திக்க இயலாது நிலையில்,  தற்போது அவரை சந்தித்து ஆசி பெற்றதாக தெரிவித்தார். 

உலக நன்மை மற்றும் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்தித்ததாகவும், வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற்று பாஜக மிகப்பெரிய வெற்றிய பெறும் எனவும் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றார் என உறுதி செய்யபட்டுள்ளது. தேர்தல் ஆணையம் மோடியின் அலுவலக பணியாளர் போல் செயல்படுவதாக ஈவிகேஎஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளது குறித்து கேட்டபோது, தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு எனவும் அப்படி மோடியின் சார்பாக செயல்பட்டிருந்தால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் எப்படி ஜெயித்திருக்க முடியும். 

இதையும் படிங்க:  எடப்பாடி பழனிசாமியின் கைக்கூலி தான் சவுக்கு சங்கர் - திருச்சி சூர்யா சிவா அதிரடி

அரசியல்வாதிகள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தனது பணியை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். தேசிய செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டது வரவேற்பதாக தெரிவித்தார்.

click me!