காஞ்சிபுரம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்து குறித்து போல் மீண்டும் நடக்காமல் தவிர்க்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிமலை அருகே இன்று (புதன்கிழமை) காலை நடந்த பட்டாசு ஆலை விபத்தில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் மேலும் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 7 பேர் பெண்கள். அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன் காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தவிர்க்கவும் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
தரமான சிகிச்சை:
"காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலை விபத்தில், 8 பேர் பலியான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு, தமிழக அரசு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்" என்று ட்விட்டரில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலை விபத்தில், 8 பேர் பலியான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்களுக்கு, தமிழக அரசு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். (1/2)
வெடி விபத்துகளைத் தவிர்க்க:
மேலும், "இனியும் இது போன்ற வெடி விபத்துக்கள் நடக்காமல் தடுக்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அதற்கான பயிற்சியையும் பட்டாசு ஆலைகள் வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு அவற்றை உரிய முறையில் கண்காணித்து, தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.