மாணவியிடம் அத்துமீறி நடந்த போலீசார் இடமாற்றம்

First Published Jan 9, 2017, 10:06 PM IST
Highlights


கோயம்பேடு ஆராய்ச்சி மாணவியிடம் அத்துமீறி நடந்த போலீசார் கண்ட்ரோல் ரூமுக்கு மாற்றப்பட்டனர். 

கோயம்பேட்டில் அமைச்சர் முன்னிலையில் கொதித்து போய் மாணவி ஒருவர் போலீசாரின் அராஜகம் பற்றி கூறியதன் எதிரொலி ஊடகங்கள் மூலம் தமிழகம் முழுதும் பெரிய எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக அன்னபூர்ணாவிடம் அத்துமீறி போலீஸ் கடமை மறந்து செயல்பட்ட காவலர்கள் இருவரும் கண்ட்ரோல் ரூமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பிய பெங்களுரு ஐசாக் பல்கலை கழக பிஎச்டி மாணவி அன்னபூர்ணா. தொடர்ந்து பேருந்தில் வந்ததால் கடுமையான தலைவலியும், வாந்தியும் மயக்கமும்  உடற்சோர்வும் ஏற்பட அவர் பேருந்தை விட்டு இறங்கியவுடன் கோயம்பேட்டில் பயணிகள் உறங்கும் இடம் அருகே மயங்கிய நிலையில் அமர்ந்திருந்துள்ளார். 

அப்போது அவ்வழியாக ரோந்து வந்த போலீசார் குப்புசாமி , ஆயுதப்படை காவலர் பாண்டியன் இருவரும் படுத்து கிடந்த அன்னபூர்ணவிடம்  பெண் பயணி என்றும் பாராமல் அவதூறாக பேசி தடியால் தாக்கியுள்ளனர்.

இது பற்றி புகார் அளித்தும் போலீசார் ஏற்காததால் இன்று காலை பேட்டி கொடுத்து கொண்டிருந்த போது ஆவேசமாக உள்ளே புகுந்து நியாயம் கேட்டார். 

அபலையான தன்னை தாக்குவதும் , அவதூறாக பேசுவதும் தான் போலீஸ் உத்யோகமா என கேட்டார். இதனால் பரபரப்பானது. இந்த விஷயம் ஊடகங்கள் மூலம் பெரிய அளவில் பரவியது.போலீசாரின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதையடுத்து கோயம்பேடு சி.எம்.பி.டி போலீஸ்காரர் குப்புசாமி , உடனிருந்த ஆயுதப்படை காவலர் பாண்டியன் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

தற்போது இவர்களுக்கு இது சிறிய அளவிலான தண்டனை என்றலும் ஸ்டேஷனுக்கு பொறுப்பான ஆய்வாளர் சரவணன் மீதும் விரைவில் புகார் எழுப்பபடலாம் என்பதால் விரைவில் அவரும் மாற்றப்படலாம் என தெரிகிறது. 

click me!