
காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அருகே வரதராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நரசிம்ம ஆஞ்சநேயர் கோவில், வெள்ள பாதிப்பு பகுதிகளாக கருதப்படும் அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டுப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அதிகாரிகள் கோவிலை இடிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் கண்ணீருடன் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில், தயவுசெய்து கோவிலை யாரேனும் காப்பாற்றுங்கள் என்றும் நரசிம்ம ஆஞ்சநேயர் கோவிலை அதிகாரிகள் இடிக்க வந்துள்ளார்கள். நேற்று மாலை 5 மணிக்கு மேல் தான் அதிகாரிடம் இருந்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டது என்றும் கால அவகாசம் கூட கொடுக்காமல் இன்று திடீரென இடிக்க வந்துள்ளதாகவும் அந்த பெண் கதறி அழுதவாறு பேசிகிறார்.
மேலும் நேற்று தேதியிட்டு அரசு தரப்பில் அனுப்பட்ட நோட்டீஸ்- யில், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 கீழ் இந்த பகுதி மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள பாதிக்கும் இடங்களாக குறியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இடத்தில் நரசிம்ம ஆஞ்சநேயர் கோவில் கட்டுப்பட்டு தங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கிரமிப்பு அகற்றக்கோரிய அனுப்பிய நோட்டிசுக்கு இதுவரை தங்களிடம் உரிய பதில் எதும் தெரிவிக்கப்படவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 30 படி வடகிழக்கு பருவமழை பாதிப்பு ஏற்படாத வண்ணம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற தவறும்பட்சத்தில், சட்ட விதிகளின்படி உடனடியாக ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதுடன் தங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கபடுவதாக சொல்லப்பட்டுள்ளது.இதனிடையே தற்போது நேன்று நோட்டீஸ் அனுப்பிய நிலையில் ஆக்கிரமிப்பு பகுதியாக குறிப்பிடப்பட்ட நரசிம்ம ஆஞ்சநேயர் கோவிலை காவல்துறையினர் உதவியுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் இடிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதனையடுத்து அரசின் இந்த செயலை கண்டித்து அப்பகுதிமக்கள் மற்றும் இந்துமுன்னணி கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தேவையில்லாமல் இதை இடிக்கிறாங்க, தயவு செய்து வந்து கோவிலை காப்பாற்றுங்கள் என்று கண்ணீருடன் கதறியப்படி பேசும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பத்தாண்டுக்கு மேலாக கோவில் நிலங்களில் அமைந்துள்ள அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றிற்கு வாடகை நிலுவை பாக்கி இருக்கும் போது ஆக்கிரமிப்பு என்று கூறி கோவிலை இடிக்கும் வேலையில் ஈடுப்படும் அரசின் செயல் கண்டனத்துக்குரியது என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்