
மதுரை மாவட்டம் வீரபாண்டி எனும் ஊரில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கபடும் என்று கூறினார். மேலும் கலப்பின மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் டோக்கன் வழங்கப்பட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் நாட்டுமாடு இனங்களை பாதுகாக்கவும் பெருக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பேசினார்.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உழவர்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும் மாடுகளை போற்றும் வகையில், தை மாதம் இரண்டாம் நாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. தழிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை யொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவினியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடத்தபடும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்புபெற்றவை.
கடந்த முறை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கிவைத்தார். தமிழகம் முழுவதும் சிறப்பு பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளை மாடுகளுக்கு பிரத்தேயக பயிற்சிகளும் கொடுக்கப்படும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான காளைகளும், மாடு பிடி வீரர்களும் ஜல்லிக்கட்டி போட்டியில் கலந்துக்கொள்வர். வாடிவாசல் திறந்தவுடன் சீறி பாயும் காளைகளும், அதன் திமில் பிடித்து அடக்கும் வீரர்களும் என்று களைக்கட்டும் இந்த சாகச விளையாட்டை காண பொதுமக்கள் அலைக்கடல் என திரள்வதும் உண்டு.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுகளுக்கு அதன் வளர்ப்பாளர் தகுந்த மருத்துவரிடம் தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். டோக்கன் முறையில் ஒவ்வொரு மாடுகளாக , வாடிவாசலில் திறந்துவிடப்படும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கார், செல்போன் போன்ற விலையுயர்ந்த பரிசு பொருட்களும் வழங்கப்படும். அதிக காளைகளை பிடித்த வீரருக்கும், எளிதில் அடக்க முடியாத காளைக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டு கவுரவிக்கப்படும்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கபடும் என்று கூறினார். மேலும் கலப்பின மாடுகளுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க டோக்கன் வழங்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் நாட்டுமாடு இனங்களை பாதுகாக்கவும் பெருக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பேசினார்.